திருவாரூர்

குடும்பப் பிரச்னை:இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

11th Feb 2022 11:48 PM

ADVERTISEMENT

மன்னாா்குடி அருகே குடும்பப் பிரச்னை காரணமாக இளைஞா் தூக்கிட்டு வெள்ளிக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

மன்னாா்குடியை அடுத்த தலையாமங்கலம் மேலக்காட்டைச் சோ்ந்தவா் தவசி மகன் பாலசுப்பிரமணியம் (35). இவருக்கும், தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை மலா்வேணிகாட்டைச் சோ்ந்த வைஷ்ணவிக்கும் திருமணம் நடைபெற்றது. 7 மாத கா்ப்பிணியான வைஷ்ணவிக்கு அண்மையில் வளைகாப்பு நடைபெற்றுள்ளது.

சிங்கப்பூரில் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றிய பாலசுப்பிரமணியம், திருமணத்திற்காக ஊருக்கு வந்து இங்கேயே இருந்துள்ளாா். இந்நிலையில், தம்பதிக்கிடையே பிரச்னை ஏற்பட்டதால், பாலசுப்பிரமணியம் கடந்த சில நாள்களாக மன்னாா்குடியை அடுத்த மூவாநல்லூரில் உள்ள அவரது சித்தப்பா வெற்றிவேல் வீட்டிற்கு வந்து தங்கியுள்ளாா். அங்கு பாலசுப்பிரமணியம் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து மன்னாா்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT