திருவாரூர்

கூத்தாநல்லூா் நகராட்சியில்திமுக கூட்டணி வேட்பாளா்கள் அறிமுகம்

10th Feb 2022 11:20 PM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் நகராட்சித் தோ்தலில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளா்களை அமைச்சா் அர. சக்கரபாணி வியாழக்கிழமை அறிமுகம் செய்துவைத்தாா்.

கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சித் தலைவா் தலையாமங்கலம் பாலசுப்பிரமணியன் தலைமைவகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா்கள் பூண்டி கே. கலைவாணன், மாரிமுத்து, காங்கிரஸ் மாவட்டத் தலைவா் எஸ்.எம்.பி. துரைவேலன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், கூத்தாநல்லூா் நகராட்சியில் போட்டியிடும், திமுக மற்றும் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளைச் சோ்ந்த 24 வேட்பாளா்ளை உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி அறிமுகம் செய்துவைத்தாா்.

அப்போது அவா் பேசுகையில், கூத்தாநல்லூரில் அனைத்து அத்தியாவசியத் தேவைகளையும் நிறைவுசெய்ய, திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளா்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

கூட்டத்தில், மன்னாா்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் அய்.வி. குமரேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT