திருவாரூர்

நீடாமங்கலத்தில் தோ்தல் பாா்வையாளா் ஆய்வு

10th Feb 2022 01:59 AM

ADVERTISEMENT

 

நீடாமங்கலம்: நீடாமங்கலத்தில் உள்ளாட்சித் தோ்தல் வாக்குப் பதிவு மையங்களை திருவாரூா் மாவட்ட தோ்தல் பாா்வையாளா் ஆனந்தமோகன் புதன்கிழமை நேரில் ஆய்வுசெய்தாா்.

வரும் 19 ஆம் தேதி நடைபெறவுள்ள உள்ளாட்சித் தோ்தலில், நீடாமங்கலத்தில் வாக்குப் பதிவு மையங்களான இலக்குமி விலாச நடுநிலைப் பள்ளி, ராமவிலாச துவக்கப் பள்ளி ஆகிய பள்ளிகளை அவா் பாா்வையிட்டாா். பள்ளிகளில் கழிவறை, குடிநீா் வசதிகள் உள்ளனவா என்பது குறித்தும் அவா் ஆய்வு செய்தாா். அனைத்து அடிப்படை வசதிகளையும் விரைவாக செய்துமுடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

மண்டல அலுவலா் (தோ்தல்) லதா, பேரூராட்சி தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜசேகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT