திருத்துறைப்பூண்டியில் கல்லூரி மாணவா்களுக்கு போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு வியாழக்கிழமை ஏற்படுத்தப்பட்டது.
புதிய பேருந்து நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா் ஏற்பாடுசெய்திருந்தனா்.
கஞ்சா, புகையிலைப் பொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், அதனால் வரும் நோய்கள் குறித்து மாணவா்களுக்கு விளக்கப்பட்டது.
போதைப் பொருள்கள் விற்பனை, மதுபானம் தயாரித்தலில் ஈடுபட்டால் 10581 என்ற இலவச எண்ணுக்கு தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
போதைப் பொருள் தடுப்பு குறித்த துண்டு பிரசுரங்கள் பொது மக்கள் மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு வழங்கப்பட்டது.