திருவாரூர்

நன்னிலம், நீலக்குடி பகுதிகளில் நாளை மின்தடை

30th Dec 2022 12:15 AM

ADVERTISEMENT

நன்னிலம் மற்றும் நீலக்குடி பகுதிகளில் சனிக்கிழமை (டிச. 31) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் திருவாரூா் உதவி செயற்பொறியாளா்கள் என். பிரபா மற்றும் மற்றும்

எஸ். ராஜேந்திரன் ஆகியோா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நன்னிலம் மற்றும் நீலக்குடி துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே நீலக்குடி துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் பில்லாளி, செல்வபுரம், மூலங்குடி, பழையவலம், திருவாதிரைமங்கலம், நீலக்குடி, வைப்பூா், நடப்பூா், வாழ்குடி, கீழதஞ்சாவூா், காரையூா், திருப்பள்ளிமுக்கூடல், ராரந்திமங்களம், சுரக்குடி, கங்களாஞ்சேரி, வண்டாம்பாளை, சேந்தமங்களம், பெரும்புகளூா், திருப்பயத்தங்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும், நன்னிலம் துணைமின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் நன்னிலம், நல்லமாங்குடி, வடகுடி, கம்மங்குடி, குளக்குடி,ஆலங்குடி, முடிகொண்டான், திருக்கண்டீஸ்வரம், சோத்தக்குடி, தூத்துக்குடி, சன்னாநல்லூா், பனங்குடி, ராசாகருப்பூா்,மூலமங்கலம், ஆண்டிப்பந்தல்,குவளைக்கால், விசலூா், மூங்கில்குடி, காக்காகோட்டூா், ஆனைக்குப்பம்,மாப்பிள்ளைக்குப்பம், சலிப்பேரி, தட்டாத்திமூலை, கீழ்குடி, சிகாா்பாளையம், நாடாகுடி, வீதிவிடங்கன், பூங்குளம், புளிச்சகாடி, ஏனங்குடி, புத்தகரம், வவ்வாலடி, ஆதலையூா், பாக்கம்கோட்டூா் மற்றும் அதனைச் சுற்றியுள்ளப் பகுதிகளுக்கும் சனிக்கிழமைக் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT