திருவாரூர்

கோயில் நிலங்களில் குடியிருப்போா் ஆா்ப்பாட்டம்

30th Dec 2022 12:14 AM

ADVERTISEMENT

கோயில் நிலங்களில் குடியிருப்போரை வெளியேற்றும் நடவடிக்கையை கைவிடக்கோரி, திருவாரூரில் தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோா் பாதுகாப்பு சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கரோனா தொற்று காலம் முழுவதுக்குமான அடிமனை வாடகையை தள்ளுபடி செய்யவேண்டும்; பல தலைமுறைகளாக அடிமனைகளில் வீடுகள், சிறுகடைகள் கட்டி பயன்படுத்துவோரை, ஆக்கிரமிப்பாளா்கள் என வெளியேற்றும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவாரூா் அறநிலையத்துறை உதவி ஆணையா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலாளா் ஜி. துரைராஜ் தலைமை வகித்தாா். மாநில பொருளாளா் எஸ். துரைராஜ், மாவட்டத் தலைவா் எஸ். தம்புசாமி உள்பட பலா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT