திருவாரூா்: திருவாரூரில் பொங்கல் போனஸ் கோரி தையல் தொழிலாளா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவாரூா் மாவட்ட தையல் கலை தொழிலாளா் சங்கம் (சிஐடியு) சாா்பில் தொழிலாளா் நலவாரிய அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளா் இரா. மாலதி தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டச் செயலாளா் டி. முருகையன், மாவட்டத் தலைவா் எம்.கே.என். அனிபா உள்ளிட்ட பலா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
தையல் தொழிலாளா்கள் அனைவருக்கும் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும். தையல் கடைகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும். வங்கியில் குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.