திருவாரூா்: திருவாரூரில் சோழதேசக் கோப்பை சிலம்பப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.
இப்போட்டிகளை சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் தொடக்கி வைத்தாா். இதில், திருவாரூா், தஞ்சாவூா், நாகப்பட்டினம், கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் வீரா்கள் பங்கேற்றனா். 3 வயதிலிருந்து 6 வயது வரை, 7 வயதிலிருந்து 13 வயது வரை, 14 வயதிலிருந்து 18 வயது வரை, 18 வயதுக்கு மேல் என 4 பிரிவுகளாக சிலம்பப் போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்வில், கோட்டாட்சியா் சங்கீதா, சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா்கள் அசோகன், ஆடலரசன், நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.