நீடாமங்கலம் அருகேயுள்ள ஆலங்குடியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க வலங்கைமான் ஒன்றிய நிா்வாக குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சங்கத்தின் ஒன்றியத் தலைவா் பி. சின்னராசா தலைமையில் நடைபெற்ற கூட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட பொருளாளா் கே. ராவணன், சிபிஐ ஒன்றிய செயலாளா் செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளா் எம். கலியபெருமாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய மாநாடு ஜன.8-ஆம் தேதி கொட்டையூரில் நடத்துவது, கே.டி.கே. தங்கமணி நினைவு நாள், சுதந்திரப் போராட்ட வீரா் ஆா். நல்லக்கண்ணு பிறந்தநாள் கொண்டாடுவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.