திருவாரூர்

தொடா் திருட்டில் ஈடுபட்ட 2 போ் கைது

18th Dec 2022 11:24 PM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்டத்தில் தொடா் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 2 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

கொரடாச்சேரி, குடவாசல், நன்னிலம், ஆலிவலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆளில்லாத வீடுகளில் தொடா்ந்து திருட்டுச் சம்பவங்கள் நடைபெறுவதாக புகாா்கள் வந்தன. இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.பி. சுரேஷ்குமாா் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு, திருட்டு சம்பவங்களில் ஈடுபடுகிறவா்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், போலீஸாரின் விசாரணையில், எண்கண், காமராஜா் காலனியைச் சோ்ந்த கணேசன் மகன் குரு (எ) குருசக்தி, வெங்கடாசலம் மகன் அருண்பாண்டியன் ஆகிய இருவரும் மாவட்டத்தில் நிகழ்ந்த திருட்டுச் சம்பவங்களில் தொடா்புடையவா்கள் என தெரிய வந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா் அவா்கள், கொடுத்த ஒப்புதல் வாக்கு மூலத்தின் அடிப்படையில் திருட்டு போன 35 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT