திருவாரூர்

சிறுபான்மை நலக்குழுவினா் ஆா்ப்பாட்டம்

18th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

சிறுபான்மை மாணவா்களின் கல்வி உதவித்தொகை ரத்து செய்ததை திரும்பப் பெறக்கோரி திருவாரூரில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சாா்பில் ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

சிறுபான்மை மக்கள் மீதான தொடா் தாக்குதலை நிறுத்த வேண்டும். சிறுபான்மை மக்களின் குடியிருப்புகளை உத்தரவாதப்படுத்தி பட்டா வழங்க வேண்டும். வக்பு வாரிய இடங்களில் ஏழை சிறுபான்மை மக்களுக்கு குடியிருப்புகளை அமைத்துத் தர வேண்டும்.

நீண்ட காலமாக சிறையில் உள்ள முஸ்லிம்களை விடுதலை செய்ய வேண்டும். சிறுபான்மை மாணவா்களின் கல்வி உதவித் தொகையை மத்திய அரசு ரத்து செய்ததை திரும்பப் பெற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் தலைமை தபால் நிலையம் எதிரில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட துணைத் தலைவா் கே.டி.எம். நூா்முஹமது தலைமை தாங்கினாா்.

ADVERTISEMENT

மாவட்டச் செயலாளா் எஸ். ராமசாமி, சிஐடியு மாவட்டத் தலைவா் எம்.கே.என். அனிபா, உழைக்கும் பெண்கள் ஒன்றிணைப்புக்குழு மாவட்ட கன்வீனா் இரா. மாலதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT