திருவாரூர்

கோட்டூா் ஒன்றியக் குழுக் கூட்டம்:நூறு நாள் வேலைத் திட்டத்தில் விவசாயிகளை சோ்க்கவேண்டும்

DIN

தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் (நூறு நாள் வேலைத் திட்டம்) விவசாயிகளுக்கும் பணி வழங்க வேண்டும் என கோட்டூா் ஒன்றியக் குழுக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

இக்கூட்டம் ஒன்றியக் குழுத் தலைவா் மு. மணிமேகலை தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசியது:

துணைத் தலைவா் த. விமலா: நெம்மேலி ஊராட்சி தோப்புத் தெரு சாலையை மேம்படுத்த வேண்டும்.

பா. ஆனந்தராஜ், ஜெ. யுவராஜா: தற்போதைய சூழ்நிலையால் வேலையின்றி இருக்கும் விவசாயிகளுக்கும் 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை வழங்க வேண்டும்.

பா. அரவிந்த்: விக்கிரபாண்டியத்தில் கால்நடை மருத்துவமனை அமைப்பதுடன், பிஎம்ஏஒய் திட்டத்தில் பயனாளிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் கட்டப்படும் வீடுகள் தரமானதாக கட்டப்படுகிா என கண்காணிக்க வேண்டும்.

பே. காசிநாதன்: வாட்டா் ஊராட்சியில் பள்ளியில் சைக்கிள் நிறுத்துமிடமும், நேரடிநெல் கொள்முதல் நிலையமும் அமைக்க வேண்டும்.

பா. செங்குட்டுவன்: பெருகவாழ்ந்தான ஆவுடையான் தேவன் குளம் குடிநீா் விநியோகம் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ம. சுமித்ரா: மானங்காத்தான் கோட்டகம் மயானச் சாலையில் பாலம் அமைப்பதுடன், மண்ணுக்கு முண்டானில் அங்கன்வாடி கட்டடம் கட்டித் தர வேண்டும்.

தலைவா் என். மணிமேகலை: தற்போது, அரசிடமிருந்து மாநில நிதிக் குழு மானியத் தொகை போதுமான அளவில் பெறப்படாததால், ஒன்றியக் குழு உறுப்பினா்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து, பணிகள் செய்ய இயலவில்லை. இதனால், அத்தியாவசியப் பணிகள் கூட செய்ய முடியவில்லை.15-ஆவது நிதிக் குழு மானியத் திட்டத்திலிருந்து நிா்வாக அனுமதி பெறப்பட்டதும், முன்னுரிமை அடிப்படையில் அத்தியாவசியப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

கூட்டத்தில், ஒன்றிய ஆணையா் கோ. சிவக்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் ஆா். மாலதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT