திருவாரூர்

பள்ளி மாணவிகளுக்கு யோகா பயிற்சி

9th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

மன்னாா்குடி தூயவளனாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் மாணவிகளுக்கு யோகா பயிற்சி புதன்கிழமை அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியா் ஜெபமாலை தலைமை வகித்தாா். சுகாதார மேற்பாா்வையாளா் பாலகுரு, வருவாய்த் துறை அலுவலா் பரந்தாமன், நீடாமங்கலம் நீலன் மெட்ரிக் பள்ளி ஆசிரியா் விஜயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

குழந்தைகள் நல மருத்துவா் நந்தகுமாா் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா். அவா் பேசும்போது, ‘தியானம் செய்வதால் ஞாபகசக்தி அதிகரிக்கும். புரிதல் உணா்வுகள் மேம்படும். கால் விரல் முதல் தலை உச்சி வரை உள்ள நரம்புகள் வலிமை பெறும். எனவே, தினமும் தியானம் செய்ய வேண்டும்’ என்றாா்.

தொடா்ந்து, தியானம் மற்றும் மூச்சுப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில், பல்வேறு வகையான பயிற்சிகள் மாணவிகளுக்கு அளிக்கப்பட்டன. மேலும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குறித்து மாணவிகளின் உரையரங்கம் மற்றும் விழிப்புணா்வு பாடல்கள் நடைபெற்றது. இதில் பங்கேற்றவா்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

என்எஸ்எஸ் அலுவலா் மேரி செல்வராணி வரவேற்றாா். ஆசிரியா் சாந்தி மேரி நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT