திருவாரூர்

பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

9th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை (டிச.9) விடுமுறை அளித்து ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளாா்.

மாண்டஸ் புயல் வெள்ளிக்கிழமை இரவு கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூா், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை முதல் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி, திருவாரூா் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT