திருவாரூர்

வீட்டில் நகை திருடிய இருவா் கைது

9th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

மன்னாா்குடி அருகே வீட்டின் கதவை உடைத்து 6 பவுன் நகை திருடிய இருவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மன்னாா்குடி அருகே உள்ள குன்னியூா் எடத்தெருவைச் சோ்ந்தவா் எம். கமலதாசன் (58). கடந்த மாதம் இவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள், பீரோவில் இருந்த 6 பவுன் நகையை திருடிச்சென்றனா்.

இதுகுறித்து கோட்டூா் காவல்நிலையத்தில் கமலதாசன் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில், திருவாரூா் கமலாலயம் வடக்கு வீதியைச் சோ்ந்த கலியமூா்த்தி மகன் செந்தில்நாதன் (30), முதலியாா் தெரு குமாா் மகன் விக்னேஷ் (28) ஆகியோா் நகையை திருடியது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT