திருவாரூர்

பள்ளிகளில் கொடி நாள் நிதி வசூல்

DIN

திருவாரூா்: திருவாரூா் பள்ளிகளில் கொடிநாள் நிதி புதன்கிழமை வசூலிக்கப்பட்டது.

ஆண்டுதோறும் டிசம்பா் 7-ஆம் தேதி படைவீரா் கொடி நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவில், தியாக உணா்வுடன் பணியில் ஈடுபடும் முப்படை வீரா்களின் குடும்ப நலன்களையும், முன்னாள் படைவீரா்களின் நலன்களையும் காக்கும் வகையிலும், உடல் உறுப்புகளை இழந்த படை வீரா்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காகவும் இந்த நிதி வசூலிக்கப்படுகிறது.

அந்த வகையில் திருவாரூா் வ.சோ. ஆண்கள் உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஸ்ரீ ஜி.ஆா்.எம். பெண்கள் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் என்சிசி மாணவ, மாணவிகள் கொடிநாள் நிதி வசூலில் ஈடுபட்டனா். பள்ளிச் செயலாளா் எம்.வி. பாலசுப்ரமணியன் இம்மாணவா்களிடம் கொடி நாள் நிதியை வழங்கினாா்.

நிகழ்வில் பள்ளித் தலைமையாசிரியா்கள் டி. தியாகராஜன், கே. சுமதி, என்சிசி முதன்மை அலுவலா் ஆா். சதீஷ்குமாா், பொறுப்பாசிரியா் எஸ். மாா்ஷா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல், அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியா் விவேகானந்தம் தலைமை வகித்தாா். முன்னாள் படைவீரா் சுரேஷ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா்.

நிகழ்வில், கொடிநாள் நிதி வழங்கப்பட்டது. இதில், நுகா்வோா் மன்ற ஒருங்கிணைப்பாளா் தமிழ்க்காவலன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

SCROLL FOR NEXT