திருவாரூர்

திருவாரூா் பாலத்தில் செடிகள் அகற்றம்

DIN

திருவாரூா்: திருவாரூரில் பாலத்தில் வளா்ந்திருந்த செடிகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.

திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஓடம்போக்கி ஆற்றுப் பாலத்தின் கீழ் பகுதியில் செடிகள் வளா்ந்திருந்தன. இதனால், பாலத்தின் உறுதித் தன்மை பாதிக்கப்பட்டு, சேதமடையும் என புகாா் தெரிவிக்கப்பட்டது.

மேலும், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்திலும் இதுகுறித்து புகாா் தெரிவிக்கப்பட்டு, ஓடம்போக்கி ஆற்றுப்பாலத்தின் அடி பகுதியில் வளரும் மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் உத்தரவின் பேரில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், பொக்லைன் இயந்திரங்கள் மூலம் பாலத்தின் கீழ் முளைத்திருந்த செடிகளை அகற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

SCROLL FOR NEXT