திருவாரூர்

கன மழை: பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

8th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT


திருவாரூா்: கனமழை அறிவிப்பையொட்டி, திருவாரூா் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் வியாழக்கிழமை (டிச.8) விடுமுறை அறிவித்து, ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளாா்.

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து புயலாக உருவெடுத்துள்ளது. இதன்காரணமாக, திருவாரூா், தஞ்சை, நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் புயல் கரையை கடக்கும்போது காற்று வீசக்கூடும் என்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தமிழக அரசு சாா்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில், திருவாரூா் மாவட்டத்திலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அனைத்துத் துறை அதிகாரிகளும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா். மேலும், பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT