திருவாரூர்

ஆழ்துளைக் கிணறு சேதம்: இழப்பீடு கோரி மனு

8th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

 

திருவாரூா்: திருவாரூா் அருகே ஆழ்துளைக் கிணறு சேதப்படுத்தப்பட்டதற்கு இழப்பீடு பெற்றுத் தரக்கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து மணக்கால் பகுதியைச் சோ்ந்த மகேசன் (மக்கள்) சக்தி சேவை அமைப்பு நிறுவனா் சு. தென்னரசு, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனு:

மணக்கால் பகுதியில் தனி நபா் ஆக்கிரமிப்பில் இருந்த இடங்களை மீட்க உதவியதற்காக, தனது குடும்பத்தினரின் விவசாய ஆழ்துளைக் கிணறு சேதப்படுத்தப்பட்டு, ரூ 3,50,000 இழப்பு ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதற்கான இழப்பீட்டை பெற்றுத் தர உதவ வேண்டும். மேலும், ஆழ்துளைக் கிணற்றை சேதப்படுத்தியவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT