திருவாரூர்

ஒழுங்குமுறை விற்பனைக்கூட புதிய கட்டடங்கள் திறப்பு

8th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT


திருவாரூா்: திருவாரூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதிய கட்டடங்களை காணொலி மூலம் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

திருவாரூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் அலுவலக கட்டடம் ரூ. 25 லட்சம், உழவா் ஓய்வு அறை ரூ.30 லட்சம், இரண்டு உலா்களங்கள் ரூ. 17 லட்சம், அணுகுசாலை ரூ. 25 லட்சம் உள்ளிட்ட புதிய கட்டடங்கள் ரூ. 1.59 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளன.

இந்த கட்டடங்களை, தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி மூலம் திறந்து வைத்தாா். அப்போது, திருவாரூரில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட குழுத் தலைவா் பாலசுப்ரமணியன், வருவாய் கோட்ட அலுவலா் சங்கீதா, வேளாண்மை இணை இயக்குநா் ஆசிா் கனகராஜ் விற்பனைக் குழு செயலாளா் மா. சரசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT