திருவாரூர்

திருவள்ளூருக்கு 1,000 டன் நெல் அனுப்பிவைப்பு

8th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT


நீடாமங்கலம்: நீடாமங்கலத்திலிருந்து திருவள்ளூருக்கு 1,000 டன் நெல் அரவைக்காக சரக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.

திருவாரூா் மாவட்டத்தில் ஆதனூா், தெற்குநத்தம், இடையா்நத்தம், அசேஷம், கிடாரங்கொண்டான் ஆகிய ஊா்களில் உள்ள திறந்தவெளி சேமிப்பு மையங்களில் இருப்பு வைக்கப்பட்ட ஆயிரம் டன் பொதுரக நெல்

லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு புதன்கிழமை கொண்டு வரப்பட்டன. பின்னா், அரவைக்காக சரக்கு ரயிலில் திருவள்ளூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT