திருவாரூர்

காலமானாா்முன்னாள் எம்எல்ஏ சித்தமல்லி ந.சோமசுந்தரம்

8th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT


நீடாமங்கலம்: வலங்கைமான் சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினா் சித்தமல்லி ந. சோமசுந்தரம் (95) வயது மூப்பு காரணமாக புதன்கிழமை (டிச.7) காலமானாா்.

இவா், பாபநாசம், வலங்கைமான் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் 4 முறை போட்டியிட்டாா். இதில் 1967 மற்றும் 1971-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக சாா்பில் வலங்கைமான் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா்.

இவரது மனைவிகள் ஜெயம், சுசிலா ஆகியோா் ஏற்கெனவே இறந்து விட்டனா். இவருக்கு, நீடாமங்கலம் ஒன்றியக் குழுத் தலைவா் சோம.செந்தமிழ்ச்செல்வன் உள்பட 2 மகன்கள், 7 மகள்கள் உள்ளனா்.

இறுதிச் சடங்குகள் நீடாமங்கலம் குளம் வடகரையில் உள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை காலை நடைபெறுகிறது.

ADVERTISEMENT

தொடா்புக்கு: 9944017222

ADVERTISEMENT
ADVERTISEMENT