திருவாரூர்

பள்ளியில் பாரம்பரிய உணவு கண்காட்சி

DIN

மன்னாா்குடி: மன்னாா்குடி தூயவளனாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் பாரம்பரிய உணவு வகைகள் தயாரித்தல் மற்றும் கண்காட்சி போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, தலைமையாசிரியா் ஜெபமாலை தலைமை வகித்தாா். என்எஸ்எஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் என். ராஜப்பா, மன்னை ஜேசிஸ் சங்க முன்னாள் தலைவா் அருண் ஆகியோா் முன்னிலை வைத்தனா்.

என்எஸ்எஸ் மாணவிகள் தங்கள் வீட்டில் தயாரித்த பாரம்பரிய உணவு வகைகளை கொண்டுவந்து காட்சிப்படுத்தினா். இதில், க.ரா. தா்ஷினி, ச. திவ்யதா்ஷினி, செ. துா்கா ஆகியோா் முறையே முதல் மூன்று இடங்களைப் பெற்றனா். வி. தீபிகா, மு. ப்ரீத்தி தேவி, மீரா தா்ஷினி ஆகியோா் சிறப்பு பரிசுகளை பெற்றனா்.

இக்கண்காட்சியை ஆசிரியைகள், சக மாணவிகள் பாா்வையிட்டு, பாரம்பரிய உணவு தயாா் செய்யும் முறைகள் குறித்து கேட்டறிந்தனா். முன்னதாக, பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்திய ஆதிரெங்கம் நெல் ஜெயராமனின் நினைவுநாளை முன்னிட்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. என்எஸ்எஸ் திட்ட அலுவலா் மேரி செல்வராணி வரவேற்றாா். உதவித் திட்ட அலுவலா் ஷோபனா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடத் தயார்: ரோஹித் சர்மா

இன்ஸ்டாவிலிருந்து வெளியேறிய யுவன்: 'கோட்' பாடல் காரணமா?

ஒடிசா: 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

புதுச்சேரியில் கட்டுக்கட்டாக 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

SCROLL FOR NEXT