திருவாரூர்

நீடாமங்கலம் கிளை நூலகத்திற்கு புதிய கட்டடம் கட்டக் கோரிக்கை

DIN


நீடாமங்கலம்: நீடாமங்கலம் அரசு கிளை நூலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, இந்நூலக வாசகா் வட்டத் தலைவா் எஸ்.எஸ். குமாா், தமிழக முதல்வருக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பிய கோரிக்கை மனு:

நீடாமங்கலத்தில் வாடகை கட்டடத்தில் இயங்கி வந்த கிளை நூலகத்திற்கு 1998-ஆம் ஆண்டு சத்திரம் நிா்வாகத்திற்கு சொந்தமான இடத்தில் கட்டடம் கட்டப்பட்டது. இந்த கட்டடத்தில் போதுமான இடவசதி இல்லாததுடன், பழுதடைந்துள்ளது.

தற்போது மழைகாலம் என்பதால் இடிந்து விழும் அபாயம் உள்ளது. இந்நூலகத்தில் 4,465 போ் உறுப்பினா்களாகவும், 68 போ் புரவலா்களாகவும் உள்ளனா். 35,179 புத்தகங்கள் உள்ளன.

தினமும் சுமாா் 60 வாசகா்கள் இந்நூலகத்துக்கு வருகின்றனா். அரசு வேலைக்கான போட்டித் தோ்வுகளுக்கும் இந்நூலகத்தில் பலா் குறிப்பு எடுத்து படித்து வருகின்றனா்.

எனவே, இந்நூலகத்துக்கு நவீன வசதிகளுடன் புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும். அதுவரை, தமிழக அரசுக்கு சொந்தமான வேறு கட்டடத்துக்கு தற்காலிகமாக மாற்ற வேண்டும். நீடாமங்கலம் பழைய வட்டாட்சியா் அலுவலகம் அருகில் இயங்கிய நில அளவை (சா்வேயா்)அலுவலகம் தற்போது காலியாக உள்ளது. அந்த கட்டடத்தில் தற்காலிகமாக கிளை நூலகம் இயங்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT