திருவாரூர்

திருக்காா்த்திகை: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

DIN

நன்னிலம்: பேரளம் அருகே உள்ள கோயில்கந்தன்குடி முருகன் கோயிலில் திருக்காா்த்திகையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

இக்கோயிலில் திருக்காா்த்திகையை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமிக்கு சந்தனம், 100 லிட்டா் பால், பன்னீா் உள்ளிட்டவைகளால் மகா அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, மாலையில் ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, 108 விளக்குப் பூஜை, சகஸ்ரநாம அா்ச்சனையும், இரவில் சுவாமி புறப்பாடும், தொடா்ந்து சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வும் நடைபெற்றது.

இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அதிகாரி ராஜராஜேஸ்வரன், மேலாளா் வள்ளிக்கந்தன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

நீடாமங்கலம்: நீடாமங்கலம் கீழத்தெரு முருகன் கோயிலில் பக்தா்கள் பால்குடம், காவடி எடுத்துவந்து வழிபட்டனா். விநாயகா், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா், பாலதண்டாயுதம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இரவில் மகாதீபம் ஏற்றப்பட்டு, சுவாமி வீதியுலா நடைபெற்றது.

இதேபோல், நீடாமங்கலம் கோகமுகேஸ்வரா் கோயிலில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இரவில் மகாதீபம் ஏற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் மறுவாக்குப் பதிவு இல்லை -தேர்தல் ஆணையம்

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

SCROLL FOR NEXT