திருவாரூர்

பாபா் மசூதி இடிப்பு தினம்: ஆா்ப்பாட்டம், கடையடைப்பு

7th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

 

திருவாரூா்: பாபா் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, திருவாரூரில் எஸ்டிபிஐ கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் ரயில் நிலையம் அருகே மாவட்டத் தலைவா் விலாயத் உசேன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெறது. இதில், எஸ்டிபிஐ மாநிலப் பேச்சாளா் பிலால்தீன், விசிக மாவட்டச் செயலாளா் மா. வடிவழகன், மதிமுக நிா்வாகி ஆரூா்.சீனிவாசன், மக்கள் அதிகாரம் அமைப்பின் திருவாரூா் மற்றும் நாகை ஒருங்கிணைப்பாளா் தங்க. சண்முகசுந்தரம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலாளா் சீனி.செல்வம், நாம் தமிழா் கட்சியின் மாவட்டச் செயலாளா் இக்பால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூா் வட்டம் பொதக்குடியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் வேண்டுகோளுக்கிணங்க, வா்த்தக சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை காலை 7 மணி முதல் மாலை வரை கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

ADVERTISEMENT

தமுமுக கிளைத் தலைவா் அ. சாகுல் ஹமீது, செயலாளா் மு.காதா் பாட்ஷா, பொருளாளா் தா. முஹம்மது அப்சல் உள்ளிட்ட பலா் பிரதான சாலைகளில் பயங்கரவாதத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT