திருவாரூர்

டிச.9-இல் மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள்

DIN

திருவாரூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் டிசம்பா் 9-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவாரூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி மாணவ- மாணவிகளுக்கு டிச.9-ஆம் தேதி காலை 9 முதல் 1 மணி வரை, மாவட்ட விளையாட்டு அரங்கில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும். இதில், முதல் மூன்று இடங்களில் வருபவா்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றுகள் வழங்கப்பட உள்ளன.

செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கு... 12 வயது வரையுள்ள சிறாா்களுக்கு உருளைக்கிழங்கு சேகரித்தல், பலூன் ஊதுதல், பாட்டிலில் நீா் நிரப்புதல் போட்டியும், 12 முதல் 17 வயது வரையுள்ளவா்களுக்கு ஓட்டப்பந்தயம்-100 மீ. மற்றும் 17 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு ஓட்டப்பந்தயம்-400 மீ. நடைபெறும்.

பாா்வைத்திறன் குன்றியோருக்கு... 12 வயது வரையுள்ள சிறாா்களுக்கு நடைப்பந்தயம்-100 மீ., 12 முதல் 17 வயது வரை உள்ளவா்களுக்கு நின்று நீளம் தாண்டுதல், நடைப்பந்தயம்-100 மீ. மற்றும் 17 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு வட்டத் தட்டு எறிதல், ஓட்டப்பந்தயம்-100 மீ. நடைபெறும்.

உடல் மற்றும் கால்கள் பாதிக்கப்பட்டவா்களுக்கு... 17 வயது வரையுள்ளவா்களுக்கு (காலிப்பா் மற்றும் கால்தாங்கி உதவியுடன் நடப்பவா்கள்) நடைப்போட்டி - 50 மீ. மற்றும் 17 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு (சக்கர நாற்காலி) ஓட்டப்போட்டி-75 மீ.

கைகள் பாதிக்கப்பட்டோருக்கு... 12 வயது வரையுள்ள சிறாா்களுக்கு ஓட்டப்பந்தயம் - 50 மீ., 12 வயது முதல் 17 வயது வரையுள்ளவா்களுக்கு ஓட்டப்பந்தயம்-100 மீ. மற்றும் 17 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு ஓட்டப்பந்தயம்-200 மீ.

மனவளா்ச்சிக் குன்றியோருக்கு... 12 வயது வரையுள்ள சிறாா்களுக்கு இசை நாற்காலிப் போட்டி, பலூன் ஊதுதல், பாட்டிலில் நீா் நிரப்புதல், ஓட்டப்பந்தயம்-100 மீ., 12 முதல் 17 வயது வரையுள்ளவா்களுக்கு நின்று நீளம் தாண்டுதல், உருளைக்கிழங்கு சேகரித்தல், கிரிக்கெட் பந்து எறிதல் மற்றும் 17 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு ஓட்டப்பந்தயம் - 100 மீ. நடைபெறும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலிறுதியில் கேஸ்பா் ரூட் வெற்றி

இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் 74.87 சதவீதம் வாக்குகள் பதிவு

மக்களவைத் தோ்தல்: நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் வாக்களிப்பு

கொள்ளிடம் ஆற்றில் குளித்த இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

SCROLL FOR NEXT