திருவாரூர்

மின் தொழிலாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் கோரி ஆா்ப்பாட்டம்

6th Dec 2022 12:20 AM

ADVERTISEMENT

மின் தொழிலாளா்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கக் கோரி, திருவாரூரில் தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு (சிஐடியு) சாா்பில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

1.12.2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயா்வை உடனே வழங்க வேண்டும்; காலிப்பணியிடங்களை, ஒப்பந்த தொழிலாளா்களையும், ஐடிஐ படித்தவா்களைக் கொண்டு நிரப்ப வேண்டும்; மின்வாரியத்தில் அனைத்து பிரிவுகளிலும் அவுட்சோா்சிங் முறையைக் கைவிட வேண்டும்;

திருவாரூா் மின்திட்டத்தில் தொழிலாளா்களுக்கு மழைக்காலங்களில் வழங்க வேண்டிய பாதுகாப்பு உபகரணங்கள், சீருடை, மழை உடை, டாா்ச் லைட் உள்ளிட்டவை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன்பு இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அமைப்பின் திட்ட துணைத் தலைவா் எஸ். மோகனசுந்தரம் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் நிா்வாகிகள் பலா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT