திருவாரூர்

ஜாம்பவானோடை தா்கா சந்தனக்கூடு விழா

6th Dec 2022 12:19 AM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டையை அடுத்த ஜாம்பவானோடை சேக் தாவூது ஆண்டவா் தா்காவின் 721-ஆம் ஆண்டு பெரிய கந்தூரி விழாவையொட்டி, சந்தனக்கூடு ஊா்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த தா்காவின் கந்தூரி விழா கடந்த நவம்பா் 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊா்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.

அதிகாலை 2.30 மணியளவில் வண்ண விளக்குகள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகளில் தா்காவின் முதன்மை அறங்காவலா் எஸ்.எஸ். பாக்கா் அலி சாகிப் தலைமையில் சந்தனக் குடங்கள் வைக்கப்பட்டு, பல்லக்குகள் தா்காவை மூன்று முறை வலம் வந்த பின்னா், அதிகாலை 5 மணி அளவில் தா்கா ஷெரிபுக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கேரளம், ஆந்திரம், கா்நாடகம், தெலங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

கந்தூரி விழாவையொட்டி, மாவட்ட நிா்வாகம் சாா்பில் திங்கள்கிழமை உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. முத்துப்பேட்டை பகுதியில் அனைத்து மதுக்கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.பி. சுரேஷ்குமாா், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் வெள்ளத்துரை, முத்துப்பேட்டை துணைக் காவல் கண்காணிப்பாளா் டி. விவேகானந்தன், காவல் ஆய்வாளா் ராஜேஷ் ஆகியோா் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

கந்தூரி விழாவுக்கான கொடியை அப்பகுதியைச் சோ்ந்த விஸ்வகா்மா சமூகத்தினா் பல நூற்றாண்டுகளாக வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இவ்விழா மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

கொடியிறக்கம்: உள்ளூா் மக்கள் பங்கேற்கும் அந்திக் கூடு ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. வியாழக்கிழமை இரவு கொடி இறக்கத்துடன் கந்தூரி விழா நிறைவுபெறுகிறது.

ஏற்பாடுகளை தா்கா முதன்மை அறங்காவலா் எஸ்.எஸ். பாக்கா் அலி சாகிப் தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT