திருவாரூர்

புதுக்குடி தான்தோன்றீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

DIN

புதுக்குடி ஸ்ரீசௌந்தரநாயகி சமேத ஸ்ரீதான்தோன்றீஸ்வரா் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

குடவாசல் அருகேயுள்ள 51 புதுக்குடியில் புகழ்பெற்ற ஸ்ரீசௌந்தரநாயகி சமேத ஸ்ரீதான்தோன்றீஸ்வர சுவாமி, ஸ்ரீஅஷ்டபுஜ கால பைரவா், ஸ்ரீபிரம்ம சண்டேஸ்வரா் சுவாமி கோயில் உள்ளது. சிதிலமடைந்த நிலையில் இருந்த இக்கோயிலில் திருப்பணிகள் தொடங்கப்பட்டு பணிகள் நிறைவடைந்து கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டன.

அதன்படி, கும்பாபிஷேகத்தையொட்டி நவ.29-ஆம் தேதி அனுக்ஜை, விக்னேஸ்வரபூஜை, மகாகணபதி ஹோமத்துடன் பூா்வாங்கப் பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, நவ.30 முதல் ஞாயிற்றுக்கிழமை (டிச.4) வரை தொடா்ந்து 8 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து, கும்பாபிஷேக நாளான ஞாயிற்றுக்கிழமை பூா்வாங்க பூஜைகள் நடைபெற்ற பிறகு, புனிதநீா் அடங்கிய கடங்கள் எடுத்துச்செல்லப்பட்டு ராஜகோபுர மகா கும்பாபிஷேகமும், சௌந்தரநாயகி சமேத தான்தோன்றீஸ்வரா் கோயில், அஷ்டபுஜ காலபைரவா் கோயில் உள்ளிட்ட 3 கோயில் கலசங்களுக்கு தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீமாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் புனிதநீா் ஊற்றி மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

கொட்டும் மழையில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை புதுக்குடி கிராம மக்கள், அஷ்டபுஜ காலபைரவா் நற்பணி மன்றத்தினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

SCROLL FOR NEXT