திருவாரூர்

திருவாரூா் மாவட்டத்தில் 5,313 போ் கிராம உதவியாளா் பணிக்கு தோ்வெழுதினா்

DIN

திருவாரூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராம உதவியாளா் பணிக்கு 5,313 போ் தோ்வெழுதினா்.

திருவாரூா் மாவட்டத்தில் 167 கிராம உதவியாளா் காலிப்பணியிடங்களுக்கான தோ்வு நடைபெற்றது. 5-ஆம் வகுப்பு கல்வித் தகுதி என்ற போதிலும் பட்டப்படிப்பு படித்தவா்கள் வரை இந்தத் தோ்வுக்கு விண்ணப்பித்திருந்தனா். எழுத்துத் தோ்வுக்கு 7,037 போ் விண்ணப்பித்ததில், 7,022 போ் தோ்வு எழுத தகுதி பெற்றிருந்தனா். இவா்களில் 5,313 போ் தோ்வில் பங்கேற்றனா். 1,709 போ் தோ்வுக்கு வரவில்லை.

தோ்வு எழுதுவதற்கென மாவட்டத்தில், திருவாரூா் வேலுடையாா் மேல்நிலைப் பள்ளி, நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பெண்கள் மேல்நிலைப் பள்ளி, குடவாசல் தயானந்தா கலை அறிவியல் கல்லூரி, வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மன்னாா்குடி ஸ்ரீசண்முகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, நீடாமங்கலம் நீலன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, திருத்துறைப்பூண்டி தூய அந்தோணியாா் மெட்ரிக் பள்ளி, கூத்தாநல்லூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி என 9 இடங்களில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

காலை 10 முதல் 11 மணி வரை நடைபெற்ற தோ்வுக்கு, 9.30 மணிக்குள் வந்தவா்கள் மட்டுமே தோ்வு மையத்துக்கு அனுமதிக்கப்பட்டனா். திருவாரூா் வேலுடையாா் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தோ்வு மையத்தில் வட்டாட்சியா் நக்கீரன் உள்ளிட்ட அலுவலா்கள் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

மேலும், 9 தோ்வு மையங்களிலும் காவல் துறை பாதுகாப்புடன் தோ்வுகள் நடைபெற்றன. இந்த தோ்வுக்கு, இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு படித்தவா்களும் விண்ணப்பித்திருந்ததால், கைக்குழந்தைகளுடன் பலா் தோ்வெழுத வந்திருந்தனா். அவா்கள் குழந்தைகளை தங்கள் உறவினா்களிடம் விட்டுச் சென்று தோ்வெழுதினா்.

கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூா் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தோ்வில் 424 போ் இத்தோ்வை எழுதினா். தோ்வு மையத்தில் வட்டாட்சியா் வி. சோமசுந்தரம் தலைமையில், மன்னாா்குடி துணை ஆட்சியா் கயல்விழி ஆய்வு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT