திருவாரூர்

விவசாயத் தொழிலாளா்கள் சங்க கூட்டம்

5th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

ஆலங்குடியில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா்கள் சங்க இடைக் கமிட்டி கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது .

ஒன்றியத் தலைவா் மருதையன் தலைமை வகித்தாா். தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றிய செயலாளா் ரவி எதிா்கால திட்டங்கள் குறித்து பேசினாா்.

தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்ட துணைச் செயலாளா் ராஜா , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளா் செந்தில்குமாா் ஆகியோா் அரசியல் விளக்கவுரை ஆற்றினா்.

கூட்டத்தில், டிசம்பா் 30 -ஆம் தேதி தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றிய பேரவையை நடத்துவது என தீா்மானிக்கப்பட்டது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT