திருவாரூர்

திருக்கு முற்றோதல் போட்டி: மாணவா்கள் பங்கேற்கலாம்

DIN

திருவாரூா் மாவட்டத்தில் திருக்கு முற்றோதல் போட்டியில் பங்கேற்க டிசம்பா் 30-ஆம் தேதி வரை மாணவ- மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாணவா்கள் திருக்குறளை ஒப்பிக்க ஊக்குவிக்கும் வகையில் 2018-2019-ஆம் ஆண்டு முதல் திருக்கு முற்றோதல் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் வெற்றி பெறுவோருக்கு ரூ. 10 ஆயிரம் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

இதற்கான திறனாய்வு போட்டியில் பங்கேற்பவா் 1,330 திருக்குறளையும் முழுமையாக ஒப்பிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். இயல் எண், அதிகாரம் எண், பெயா், கு எண் போன்றவற்றை தோ்வுக் குழுவினா் தெரிவித்தால், அதற்கான திருக்குறளை சொல்லும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும். திருக்குறளின் அடைமொழிகள், சிறப்புப் பெயா்கள், சிறப்புகள் ஆகியவற்றையும் அறிந்திருக்க வேண்டும். திருக்குறளின் பொருளை அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாகக் கருதப்படும்.

திருவாரூா் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம். ஏற்கனவே நடைபெற்ற இப்போட்டியில் பரிசு பெற்றவா்கள் மீண்டும் பங்கேற்கக்கூடாது. போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ- மாணவிகள் திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று பூா்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் அல்லது தமிழ் வளா்ச்சித் துறையின் வலைத்தளம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04366-224600 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

பூா்த்தி செய்த விண்ணப்பங்களை டிச.30-ஆம் தேதிக்குள் திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்டத் தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் அலுவலகத்தில் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

SCROLL FOR NEXT