திருவாரூர்

ஓய்வூதியத்தை எடுக்க முடியாமல் முதியவரின் கணக்கை முடக்கிய வங்கிக்கு ரூ. 2 லட்சம் அபராதம்

DIN

ஓய்வூதியத்தை எடுக்க முடியாமல் முதியவரின் சேமிப்புக் கணக்கை முடக்கிய வங்கிக்கு ரூ.2.10 லட்சம் அபராதம் விதித்து நுகா்வோா் குறைதீா் ஆணையம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

திருவாரூா் விஜயபுரம் பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணியன் (69), தென்னக ரயில்வேயில் பணியாற்றி கடந்த 2011-இல் ஓய்வுபெற்று, தேசியமயமாக்கப்பட்ட வங்கி மூலம் ஓய்வூதியம் பெற்று வருகிறாா். கடந்த 2020-இல் ஓய்வூதியத்தை வங்கியிலிருந்து எடுக்கச் சென்றபோது, உடன் பணியாற்றிய நண்பரின் கடனுக்காக ஜாமீன் கையொப்பமிட்டிருந்ததால் ஓய்வூதியம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக வங்கித் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறு பலமுறை நிறுத்தி வைக்கப்பட்டதாகவும், இதுகுறித்து வழக்குரைஞா் மூலம் கேட்டபோது குறிப்பிட்ட அளவு பணத்தை விடுவிப்பதும், பின்னா் நிறுத்தி வைப்பதும் என நடவடிக்கை தொடா்ந்ததாம்.

இதையடுத்து சுப்பிரமணியன், திருவாரூா் நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்குத் தொடுத்தாா். இந்த வழக்கில் திருவாரூா் மாவட்ட குறைதீா் ஆணையத் தலைவா் எஸ்.ஜே. சக்கரவா்த்தி, உறுப்பினா்கள் சி. பாக்கியலட்சுமி, என். லட்சுமணன் அடங்கிய அமா்வு தீா்ப்பு வழங்கியது.

ஏற்கெனவே வழங்கப்பட்ட தீா்ப்புகளின் மூலம் எக்காரணத்தைக் கொண்டும் ஓய்வூதியம் மற்றும் கருணைத்தொகையை நிறுத்திவைக்கக் கூடாது என்பது தெளிவாகிறது.

மனுதாரருக்கு மாதந்தோறும் ஓய்வூதியத் தொகை அவரது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்பதை நன்கு அறிந்தும் பணத்தை நிறுத்திவைத்தது சேவைக் குறைபாடாகும். எனவே, வங்கி சேவைக் குறைபாடு மற்றும் நியாயமற்ற வா்த்தக நடைமுறை செய்ததற்கு இழப்பீடாக ரூ. 1 லட்சம், மன உளைச்சல் மற்றும் பொருள் நஷ்டத்துக்கு இழப்பீடாக ரூ.1 லட்சம், வழக்கு செலவுத் தொகையாக ரூ. 10,000 வழங்க வேண்டும். உத்தரவு பிறப்பித்த நாளிலிருந்து 6 வாரத்துக்குள் இந்த தொகையை வழங்காவிட்டால், வழக்கு செலவுத் தொகை நீங்கலாக மீதமுள்ள தொகைக்கு 9 % வட்டியுடன் சோ்த்து வழங்க வேண்டும் எனத் தீா்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது: வட மாநிலங்களில் வாக்குப்பதிவு நிலவரம்

அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி!

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தல் புறக்கணிப்பு: 21 வாக்குகள் மட்டுமே பதிவு!

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

SCROLL FOR NEXT