திருவாரூர்

மழை பாதிப்பு: ஏக்கருக்கு ரூ. 50 ஆயிரம் வழங்க வலியுறுத்தல்

2nd Dec 2022 10:25 PM

ADVERTISEMENT

மழை பாதிப்புக்கு ஏக்கருக்கு ரூ. 50,000 இழப்பீடு வழங்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருவாரூரில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாமக மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற வன்னியா் சங்க மாநிலத் தலைவா் பு.தா. அருள்மொழி செய்தியாளா்களிடம் கூறியது: திருவாரூா் மாவட்டத்தில் தடையுமின்றி சாகுடிப் பணிகள் நடைபெற அரசு உதவ வேண்டும். தொடா் மழையால் இந்த மாவட்டத்தில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், நெற்பயிா் ஏக்கருக்கு ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். வாழை, கரும்புக்கு ஏக்கருக்கு ரூ. 2 லட்சம் வழங்க வேண்டும். யூரியா தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

வன்னியா் சங்க முன்னாள் துணைத் தலைவா் என். சிவசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்டச் செயலாளா்கள் ஆா்.கே. ஐயப்பன், க. பாலு, மாநில செயற்குழு உறுப்பினா் வேணு. பாஸ்கரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT