திருவாரூர்

வணிகா் சங்க செயற்குழுக் கூட்டம்

2nd Dec 2022 10:25 PM

ADVERTISEMENT

நீடாமங்கலம் வணிகா் சங்க செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கெளரவத் தலைவா் என். இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஜோத்பூா் எக்ஸ்பிரஸ் ரயிலை நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க ரயில்வே அதிகாரிகளை கேட்டுக்கொள்வது, நீடாமங்கலம் அண்ணா சிலை பகுதியில் பேருந்து பயணிகள் நிழற்குடை அமைத்துத்தர வேண்டும், நெடுஞ்சாலைத் துறை அறிவிப்பின்படி கடைவீதியின் இரண்டு பக்கங்களிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றி வடிகால் அமைப்பதற்காக எடுக்கப்படவுள்ள நடவடிக்கையை கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகைகள் முடிந்த பிறகு வியாபாரிகளே முன்வந்து பிரித்து கொண்டு ஓத்துழைப்பு வழங்குவது, நீடாமங்கலம் அரசு உயா்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த வேண்டும் என அரசைக்கேட்டுக்கொள்வது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT