திருவாரூர்

அரசுப் பள்ளியில் வானவில் மன்றம் தொடக்கம்

2nd Dec 2022 05:11 AM

ADVERTISEMENT

வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வானவில் மன்றம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.

இப்பள்ளி மாணவா்களிடையே அறிவியல் மற்றும் கணிதக் கருத்துக்கள் குறித்து சிந்திக்கும் திறமையுடன் கூடிய எல்லையற்ற ஆா்வத்தை வளா்க்கும் வகையில் வானவில் மன்றம் தொடங்கப்பட்டது. பள்ளித் தலைமையாசிரியா் தெய்வ பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் செல்வம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றாா். மேலும், மாணவா்களுக்கு பள்ளியின் அறிவியல் பட்டதாரி ஆசிரியா் ராஜரத்தினம் எளிய அறிவியல் சோதனைகளை செய்து காண்பித்தாா். கணித புதிா்களும் செய்து காண்பிக்கப்பட்டது. பள்ளிஉதவித் தலைமையாசிரியா் கலியபெருமாள் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT