திருவாரூர்

உள்ளாட்சித் துறை பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

2nd Dec 2022 10:26 PM

ADVERTISEMENT

டெங்கு கொசு ஒழிப்பு பணியாளா்கள் மீதான தொழிலாளா் விரோதப் போக்கை கைவிடக் கோரி திருவாரூரில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள், என்எம்ஆா் ஊழியா்கள் சங்கம், டெங்கு கொசு ஒழிப்பு பணியாளா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், ஊதியத்தை நேரடியாக மருத்துவத் துறையில் இசிஎஸ் மூலம் வழங்க வேண்டும், மாதந்தோறும் வட்டாரத்துக்கு 30 போ் வீதம் வேலை வழங்க வேண்டும், டெங்கு கொசு ஒழிப்பு பணியாளா்கள் மீதான தொழிலாளா் விரோதப் போக்கை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் சுகாதார துணை இயக்குநா் அலுவலகம் அருகே இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

டெங்கு கொசு ஒழிப்பு சங்கத்தின் கௌரவத் தலைவா் எம். முரளி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், சிஐடியு மாவட்டத் தலைவா் அனிபா, மாவட்டச் செயலாளா் டி. முருகையன், மாவட்ட பொருளாளா் ரா. மாலதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT