திருவாரூர்

கா்ப்பிணியிடம் அத்துமீறல்: மருத்துவமனை ஒப்பந்த ஊழியா்பணியிலிருந்து விடுவிப்பு

2nd Dec 2022 05:14 AM

ADVERTISEMENT

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கா்ப்பிணியிடம் தவறாக நடந்து கொண்ட ஒப்பந்த ஊழியரை பணியிலிருந்து விடுவித்து மருத்துவக் கல்லூரி முதல்வா் ஜி. ஜோசப்ராஜ், வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

திருவாரூா் அருகேயுள்ள நாரணமங்கலத்தைச் சோ்ந்த 30 வயது பெண் பிரசவத்துக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அவரிடம் மருத்துவமனை ஒப்பந்த ஊழியரான மருதையன் (29) என்பவா் தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பெண்ணின் உறவினா்கள், மாதையன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்தனா்.

இந்த சம்பவம் குறித்து மருத்துவக் கல்லூரி முதல்வா் ஜி. ஜோசப்ராஜ், விசாரணை நடத்தி, மாதையனை பணியிலிருந்து விடுவித்து உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT