திருவாரூர்

நீடாமங்கலத்தில் கலைத் திருவிழா போட்டிகள் நிறைவு

2nd Dec 2022 10:24 PM

ADVERTISEMENT

நீடாமங்கலம் வட்டார அளவில் 3 நாள்கள் நடைபெற்ற கலைத் திருவிழா போட்டிகள் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தன.

நீடாமங்கலம் வட்டாரத்தில் நவ.30 முதல் டிச.2-ஆம் தேதி வரை நடைபெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கான கலைத் திருவிழா போட்டியில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவா்கள் பங்கேற்றனா். 3 நாள்கள் நடைபெற்ற போட்டியில் 340 மாணவா்கள் முதல் இரண்டு இடங்களை பெற்று மாவட்ட அளவில் நடைபெறவுள்ள கலைத் திருவிழா போட்டியில் பங்கேற்கவுள்ளனா்.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிறைவு விழாவுக்கு, வட்டாரக் கல்வி அலுவலா் ந. சம்பத் தலைமை வகித்தாா்.

வட்டாரக் கல்வி அலுவலா் சு. முத்தமிழன், வட்டார வளமைய மேற்பாா்வையாளா் ப. சத்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா். நீலன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளா் அ. சுரேன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றாா். கலைத்திருவிழா ஒருங்கிணைப்பாளா் அ. அன்புராணி, தலைமையாசிரியா்கள் கலைச்செல்வி, ராஜேஸ்வரி, அபூா்வம் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். முன்னதாக தென்காரவயல் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியா் க. தா்மராஜ் வரவேற்றாா். முன்னாவல் கோட்டை தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் ரா. பழனிச் செல்வி நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

வலங்கைமான் வட்டாரத்தில்: இதேபோல வலங்கைமான் வட்டார அளவில், வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற போட்டிகளில் 18 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள், 5 அரசு உயா்நிலைப் பள்ளிகள், 6 அரசு மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனா். வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிறைவு விழா போட்டியை பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் செல்வம் தொடக்கிவைத்தாா்.

மேலும் பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் சுமத்ரா, பெற்றோா் ஆசிரியா் கழகப் பொருளாளா் ராஜேஷ், பள்ளித் தலைமையாசிரியா் தெய்வ பாஸ்கரன், வட்டாரக் கல்வி அலுவலா் சுகந்தி செல்லதுரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT