திருவாரூர்

குழந்தைகள் தின போட்டியில் வென்ற மாணவா்களுக்கு பரிசுகள்

DIN

திருவாரூா்: திருவாரூரில், குழந்தைகள் தின விளையாட்டுப் போட்டிகளில் வென்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு சான்றிதழ் மற்றும் விளையாட்டுப் பொருள்களை மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் புதன்கிழமை வழங்கினாா்.

மாவட்டத்தில் குழந்தைகள் ஆளுமைத் திறன் மேம்படும் வகையிலும், விளையாட்டில் பங்கேற்பு ஆா்வத்தை தூண்டும் வகையிலும், குழந்தைகள் தினத்தையொட்டி, நவ.14 முதல் 20-ஆம் தேதிவரை விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

மாவட்டத்தில், திருநெய்ப்போ் அரசு மேல்நிலைப் பள்ளி, நெடும்பலம் அரசு மேல்நிலைப் பள்ளி, எடையூா் அரசு மேல்நிலைப் பள்ளி, பாலையக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி, கோட்டூா் அரசு மேல்நிலைப் பள்ளி, வலங்கைமான் அரசு மேல்நிலைப் பள்ளி, இராயபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி, கண்டிரமாணிக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி, குளிக்கரை அரசு மேல்நிலைப் பள்ளி, ஆனைக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் 3,000 மாணவா்கள் பங்கேற்றனா்.

போட்டிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் வழங்கினாா். மேலும், விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்ற 10 அரசுப் பள்ளிகளுக்கும் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில், யுனிசெப் தன்னாா்வல அமைப்பு மற்றும் சைல்டுலைன் மூலம் ரூ.20,000 மதிப்பிலான விளையாட்டுப் பொருள்களும் வழங்கப்பட்டன.

மேலும், நீரிழிவு நோய் மேலாண்மை தொடா்பான வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்க வழக்கங்கள், உடற்பயிற்சி ஆகியவை குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை மன்னாா்குடியைச் சோ்ந்த தனியாா் பள்ளி மாணவிகள், மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT