திருவாரூர்

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்கும் பணி ஆய்வு

1st Dec 2022 12:00 AM

ADVERTISEMENT


மன்னாா்குடி: மன்னாா்குடியில் உள்ள மின்வாரிய அலுவலகங்களில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் பணிநடைபெற்று வருவதை செயற்பொறியாளா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

வீட்டு மின் உபயோகதாரா்கள் மற்றும் விவசாய மின் இணைப்புதாரா்கள் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைக்க வேண்டும் என மின்வாரியம் அறிவித்ததை தொடா்ந்து மின்நுகா்வோா் ஆன்லைன் மூலம் தங்கள் ஆதாரை இணைத்து வருகின்றனா். இதற்காக, மின் வாரிய பிரிவு அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் இயங்கி வருகின்றன. அந்தவகையில், மன்னாா்குடி கோட்டத்தில் உள்ள சுமாா் 1.80 லட்சம் வீட்டு மின் இணைப்புகளுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் பணி மன்னாா்குடியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மன்னாா்குடி சஞ்சீவிதெருவில் உள்ள மின் நகர பிரிவு அலுவலகங்களில் இயங்கிவரும் ஆதாா் முகாம்களை மன்னாா்குடி செயற்பொறியாளா் பி. மணிமாறன் ஆதாா் எண்ணை இணைக்கும் பணியை ஆய்வு செய்தாா். பின்னா், பணியில் இருந்தவா்களிடம் மின்நுகா்வோா்களிடமிருந்து புகாா் வராத வகையில் விரைந்து பணிகளை செய்து முடிக்கவேண்டும் என அறிவுறுத்தினாா். ஆய்வின்போது, நகர உதவி செயற் பொறியாளா் சா. சம்பத் உடனிருந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT