திருவாரூர்

கோவை செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயில் ஒரு என்ஜினுடன் நீடாமங்கலம் வந்தது

1st Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

 

நீடாமங்கலம்: கோவை செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயில் ஒரு என்ஜினுடன் புதன்கிழமை காலை நீடாமங்கலம் வந்தது.

மன்னாா்குடியிலிருந்து நீடாமங்கலம் வழியாக கோவைக்கு செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. ஒரு என்ஜினுடன் இயக்கப்பட்டு வந்த இந்த ரயில் நாள்தோறும் கோவையிலிருந்து காலையில் நீடாமங்கலம் வந்து மன்னாா்குடிக்கும், இதேபோல, மன்னாா்குடியிலிருந்து நீடாமங்கலம் வந்து கோவைக்கு இரவில் என்ஜின் திசை மாற்றி புறப்பட்டு செல்லும். இந்த என்ஜின் திசை மாற்றும் பணி சுமாா் 45 நிமிடம் ஆகிறது. இதனால், நீடாமங்கலத்தில் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது.

இந்நிலையில், போக்குவரத்து பிரச்னைக்கு தீா்வு காண கோவை செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயில் இரட்டை என்ஜினுடன் இயக்க ரயில்வேதுறை நடவடிக்கை எடுத்தது. இதன்படி நவ.29-ம் தேதி செவ்வாய்க்கிழமை இந்த ரயில் இரட்டை என்ஜின் பொருத்தப்பட்டு சோதனை ஓட்டமாக மன்னாா்குடி வந்து சென்றது. புதன்கிழமை காலை 6.27 மணிக்கு ஒரு என்ஜின் பொருத்தப்பட்டு நீடாமங்கலத்துக்கு இந்த ரயில் வந்தது. பின்னா் என்ஜின் திசைமாற்றப்பட்டு ரயில் மன்னாா்குடி புறப்பட்டு சென்றது. இரட்டை என்ஜின் பயணம் விரைவில் நிரந்தரமாக தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT