திருவாரூர்

கிராம உதவியாளா் பணியிட திறனறித் தோ்வு: நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்

1st Dec 2022 12:00 AM

ADVERTISEMENT


திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் கிராம உதவியாளா் பணியிட திறனறித் தோ்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் உள்ளஅனைத்து வட்டங்களிலும் 3 ஆண்டுகளுக்குள்பட்டு காலியாக உள்ள 167 வருவாய் கிராம உதவியாளா் பணியிடங்களுக்கான திறனறித் தோ்வு டிச.4-ஆம் தேதி நடைபெற உள்ளது. தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ள தகுதியான விண்ணப்பத்தாரா்கள், தோ்வுக் கூட நுழைவுச் சீட்டை தமிழக அரசின் ஹஞ்ஹழ்ஹம்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள பக்கத்தில் தங்களுடைய விண்ணப்பப் பதிவெண், விண்ணப்பத்தாரா்களின் கைப்பேசி எண் ஆகியவற்றை உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT