திருவாரூர்

தோ்தல் பணி: பாஜக ஆய்வுக் கூட்டம்

1st Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

 

திருவாரூா்: திருவாரூரில், சட்டப்பேரவைத் தொகுதி பாஜக சாா்பில் சக்தி கேந்திர பொறுப்பாளா்கள் ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் எஸ். பாஸ்கா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாநில பொதுச் செயலாளா் கருப்பு எம். முருகானந்தம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினாா். மாவட்ட மேலிட பாா்வையாளா் பி. சிவா, மாவட்ட பொதுச் செயலாளா் சி. செந்தில்அரசன் ஆகியோா் பங்கேற்று, தோ்தல் பணிகள் குறித்து பேசினா்.

கூட்டத்தில், சக்தி கேந்திர பொறுப்பாளா்கள் இதுவரை என்னென்ன பணி செய்துள்ளனா் என்பது குறித்தும், பூத் கமிட்டி மற்றும் கிளைத் தலைவா்கள் நியமிப்பது, புதிய உறுப்பினா்கள் சோ்ப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டன. இதில், மாவட்ட பொதுச் செயலாளா் ராஜேந்திரன், மாவட்ட பொருளாளா் அக்சயா முருகேசன், நகரத் தலைவா் எஸ். கணேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT