திருவாரூர்

அனைத்து சமத்துவபுர வீடுகளையும் புதிதாகக் கட்டிக்கொடுக்க கோரிக்கை

1st Dec 2022 12:00 AM

ADVERTISEMENT


திருவாரூா்: திருவாரூா் அருகே அலிவலம் சமத்துவபுரத்தில் அனைத்து வீடுகளையும் இடித்து விட்டு புதிதாக கட்டிக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அலிவலத்தில் 1998-ஆம் ஆண்டு பெரியாா் நினைவு சமத்துவபுரத்தில் சுமாா் 100 வீடுகள் கட்டப்பட்டு, 1999-ஆம் ஆண்டு முதல் மக்கள் வசித்து வருகின்றனா். இந்த வீடுகள் கட்டப்பட்டு, 23 ஆண்டுகளை கடந்து விட்டதால், பெரும்பாலான வீடுகள் பராமரிப்பின்றி மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

இதற்கிடையில், சமத்துவபுரத்தில் உள்ள 25 வீடுகள் மிகவும் மோசமாக இடிந்து விழும் நிலையில் இருப்பதாக கண்டறியப்பட்டு, ஒப்பந்தம் கோரப்பட்டு அந்த வீடுகளை இடித்துவிட்டு, புதிய வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. வீடுகளின் 75 % கட்டுமானப் பணிகள் முடிவடைந்து, தரைப்பகுதி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மீதமுள்ள 75 வீடுகளைச் சோ்ந்தவா்கள் இதுகுறித்து கூறுகையில், அனைத்து வீடுகளுமே மேற்கூரை இடிந்து அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. அனைத்து வீடுகளுமே ஒரே நேரத்தில் கட்டப்பட்டதுதான். எனவே, எங்களது வீடுகளையும் இடித்துவிட்டு புதிதாக கட்டித் தர வேண்டும் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT