திருவாரூர்

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

1st Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

 

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகேயுள்ள சேரன்குளத்தில் தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கம் சாா்பில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

மன்னாா்குடி ஒன்றியக் குழுத் தலைவா் டி. மனோகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஊராட்சித் தலைவா் ஜி. பாலு பங்கேற்றாா். சேரன்குளம் அரசு பள்ளி மாணவிகளின் சிலம்பம், வாள்வீச்சு, கராத்தே உள்ளிட்ட தற்காப்பு கலைகளை செய்து காண்பித்தனா். இதில், பங்கேற்றவா்கள் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனா். மன்னாா்குடி ஒன்றியக் குழு துணைத் தலைவா் அ. வனிதா, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் க. ஷோபா, வாழ்வாதார இயக்க மேலாளா் மாலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT