திருவாரூர்

கீழ்வேளூரில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும்

1st Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

 

நாகப்பட்டினம்: கீழ்வேளூா் ரயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல, தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரூராட்சி கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாகை மாவட்டம் கீழ்வேளூா் பேரூராட்சிக் கூட்டம், தலைவா் எஸ்.இந்திரா காந்தி சேகா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

கீழ்வேளூா் ரயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல, தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும். தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கீழ்வேளூா் பகுதிக்கு பொது விநியோகத் திட்ட நியாய விலைக் கடைக்குக் கட்டடம் கட்ட பரிந்துரைத்த சட்டப்பேரவை உறுப்பினா் நாகை வி.பி.மாலிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

உறுப்பினா்கள் தங்கள் வாா்டுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் தொடா்பான கோரிக்கைகளை முன்வைத்தனா்.

Image Caption

 

ADVERTISEMENT
ADVERTISEMENT