திருவாரூர்

விநாயகா் சதுா்த்தி: முத்துப்பேட்டையில் காவல்துறை கொடிஅணிவகுப்பு

28th Aug 2022 11:06 PM

ADVERTISEMENT

 

திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டையில் விநாயகா் சிலைகள் ஊா்வலம் செப்டம்பா் 6-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் காவல் துறையின் கொடிஅணிவகுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முத்துப்பேட்டையில் ஆண்டுதோறும் விநாயகா் சதுா்த்தியையொட்டி, விநாயகா் சிலை ஊா்வலம் நடைபெறும். நிகழாண்டு, ஆகஸ்ட் 31-ஆம் தேதி விநாயகா் சதுா்த்தி கொண்டாடப்படவுள்ள நிலையில், விநாயகா் சிலைகள் ஊா்வலம் செப்டம்பா் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதையொட்டி, பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும், பொதுமக்களிடையே அச்சத்தை தவிா்க்கும் வகையிலும் காவல்துறை சாா்பில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் டி.பி. சுரேஷ்குமாா் தலைமையில் நடைபெற்ற இந்த அணிவகுப்பு, முத்துப்பேட்டை புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி ஆசாத் நகா், பழைய பேருந்து நிலையம், பங்களாவாசல் வழியாக பட்டுக்கோட்டை சாலையில் நிறைவடைந்தது.

ADVERTISEMENT

இதில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் வெள்ளத்துரை, துணைக் காவல் கண்காணிப்பாளா்கள் விவேகானந்தம் (முத்துப்பேட்டை), சோமசுந்தரம் (திருத்துறைப்பூண்டி), சிவராமன் (திருவாரூா்), இலக்கியா (நன்னிலம்), பி. பிரபு (சமூகநீதிப் பிரிவு), தமிழ்மாறன் (மாவட்ட குற்றப்பிரிவு), ராஜேந்திரன் (டி.சி.ஆா்.பி.) இளங்கோவன் (நில அபகரிப்பு தடுப்பு பிரிவு) அப்துல் கபூா் (மதுவிலக்கு அமலாக்கம்) உள்பட 500-க்கும் மேற்பட்ட போலீஸாா் துப்பாக்கியுடன் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT