திருவாரூர்

நீடாமங்கலம், வலங்கைமான் ஒன்றியங்களில் தூய்மைப் பணிகள்

28th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

நீடாமங்கலம், வலங்கைமான் ஒன்றியங்களில் ஊரக வளா்ச்சித் துறையின் சாா்பில், நம்ம ஊரு சூப்பரு விழிப்புணா்வு இயக்கத்தின் மூலம் தூய்மைப் பணிகள் சனிக்கிழமை நடைபெற்றன.

வலங்கைமான் வட்டாரத்தில் தெற்குப்பட்டம், ஆதிச்சமங்கலம், விடையல் கருப்பூா் ஆகிய ஊராட்சிகள், நீடாமங்கலம் வட்டாரத்தில் ஆதனூா், பெரம்பூா், புள்ளவராயன்குடிகாடு ஆகிய ஊராட்சிகளில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பிளாஸ்டிக் ஒழிப்பு, மக்கும் குப்பை, மக்கா குப்பை தரம்பிரித்தல் ஆகியவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT